1. Home
  2. தமிழ்நாடு

இந்த ஒரு ஆப் போதும்..! இனி மின் கட்டண விவரங்கள் உடனுக்குடன் தெரிஞ்சிக்கலாம்..!

1

தமிழ்நாடு மின்வாரியத்தின் களப்பணியாளர்கள் குறிப்பிட்ட தேதியில் வந்து மீட்டரில் மின் கணக்கீடு பணிகளை மேற்கொள்கின்றனர். இதன் பின்னர் இணையதளங்களில் இந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து நுகர்வோரின் மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக மின் கட்டண விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உடனுக்குடன் மின்கட்டண விவரங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புதிய மொபைல் செயலியை தமிழக மின்வாரியம் அறிமுகம் செய்ய உள்ளது. இதன்படி மின் கணக்கீடு எடுத்தவுடன் உடனடியாக பயனர்கள் தங்களின் மின்கட்டண விபரத்தை அறிந்து கொள்ள முடியும்.

இதே போல் பாரத் பில் பே வாயிலாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தவும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பயனர்கள் தங்களின் முந்தைய மாதங்களுக்கான மின் கட்டண ரசீதுகளை பெற உதவும் வகையில் வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக ‘tnebnet.org/. என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பயனர்கள் தங்களின் மின் இணைப்பு எண், ரசீது எண், தேதியை பதிவிட்டு தங்களுக்கு தேவையான ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

இப்படி எண்ணற்ற வசதிகளை மின்வாரியம் செய்து வரும்நிலையில், இன்னொரு அதிரடியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, மின்வாரிய களப்பணிகளை கண்காணிப்பதற்காகவே, புது செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஐடி பிரிவு தலைமைப் பொறியாளர், மின்வாரிய அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில் உள்ளதாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தாழ்வழுத்த மின் இணைப்பு பிரிவில் களப்பணிகளை மேற்கொள்வோருக்காக ஆண்ட்ராய்டு கைபேசி செயலி (எப்எஸ்எம்) உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், மின் இணைப்பை துண்டித்தல், மீண்டும் இணைப்பு வழங்குதல், பழுதான மீட்டர்களை மாற்றுதல், புதிய மின் இணைப்பு வழங்குதல், மின் நுகர்வோர் அளிக்கும் புகார்கள் உள்ளிட்ட 7 சேவைகள் தொடர்பான தரவுகள், புகைப்படங்களை பதிவு செய்வதோடு, சரிபார்க்கவும் முடியும். இந்த செயலி மூலம் களப்பணியாளர்களுக்கான பணிகளை உதவிப் பொறியாளர் ஒதுக்கீடு செய்ய முடியும். மேலும், மின் நுகர்வோரின் புகார்கள், சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளருக்கு நேரடியாக சென்று சேர்ந்துவிடும்.

இந்த செயலி தற்போது சோதனை அடிப்படையில் பயன்படுத்த பட உள்ளது. மேலும் விரைவில் தமிழகம் முழுவதும் நடைமுறைமுறைக்கு வர உள்ளது.. 

Trending News

Latest News

You May Like