மகளிர் உரிமை தொகை குறித்து வெளியான இந்த செய்தி வதந்தி - தமிழக அரசு
கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெறுவதற்கான மனுக்களை கொடுக்க 3 நாட்கள் முகாம மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (17.8.24) துவங்கி ஞாயிறு தவிர செவ்வாய் வரை நடைபெற உள்ளது என தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
இது உண்மை என நம்பி மக்கள் பலரும் இதை தங்கள் வட்டாரத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இது வதந்தி எனவும் அப்படி எந்த ஒரு முகாமும் நடத்த அரசு உத்தரவிடவில்லை எனவும் தமிழக அரசின் தகவல் சரிப்பரப்பு பிரிவு விளக்கமளித்துள்ளது.