1. Home
  2. தமிழ்நாடு

நாளை முதல் இந்த புதிய திட்டம்..! இனி பட்டா வாங்குவது ரொம்பவே ஈஸி..!

1

தமிழகத்தில்  பத்திரப்பதிவு துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆன்லைன் மூலம் பட்டா பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு வகையான சீர்திருத்தங்களை  தமிழக அரசு  செய்து வருகிறது.

இந்நிலையில் நாளை ஜூன் 15ம் தேதி முதல் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றும் செய்யும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், பொதுமக்களுக்கு பட்டா மாறுதல் குறித்த தகவல்கள் கிரையம் கொடுப்பவருக்கும், கிரையம் பெறுபவருக்கும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.  

பத்திரப்பதிவு

பத்திரப் பதிவுத்துறையில் பதிவு செய்யும் சொத்து விவரங்களின் அடிப்படையில் தான் தானியங்கி முறையில் ஆன்லைன் பட்டா மாறுதல் நடைபெற இருக்கிறது. இதனால், ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு பட்டா கிடைத்து விடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

புதிய நடைமுறையின் படி, வாங்கப்படும் சொத்தின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருப்பின் இது குறித்த தகவல்கள் அனைத்துமே பதிவுத்துறையே வருவாய்த்துறைக்கு தெரிவித்து விடும். பதிவுத்துறை அளிக்கும் தகவலின்படி பட்டா வழங்கப்பட்டு வருகிறது.  

பத்திரப்பதிவு

பதிவுத்துறைத் தலைவரின் அறிவுரையின் படி, 100% தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய நாளை ஜூன் 15ம் தேதி முதல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பத்திரப் பதிவுக்கு பின்பு ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் பட்டா மாறுதல் தொடர்பான  அனைத்து தகவல்களும்  சம்பந்தப்பட்ட நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து எஸ்எம்எஸ்  மூலம்  கிரையம் கொடுப்பவர், பெறுபவர் இருவருக்கும் தெரிவிக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Trending News

Latest News

You May Like