கொரோனாவை தடுக்க இந்த மாஸ்க் தான் ‘பெஸ்ட்’ : ஆய்வில் தகவல்!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில் மிக முக்கிய தகவல் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மக்கள் மாஸ்க் அணிந்தாலே கொரோனாவை 90% தடுக்க முடியும் என்பது உலக விஞ்ஞானிகளின் கருத்து. அதற்கேற்றாற் போல் தற்போது மக்கள் மத்தியில் மாஸ்க் அணிய வேண்டும் என விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதில் என்-95 மற்றும் மருத்துவ முக கவசங்கள் சிறப்பாக இருப்பதாக ஏற்கனவே ஆய்வில் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது வீடுகளில் தயாரிக்கப்படும் முகக்கவசங்கள் சிறப்பாக உள்ளதாக அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
வீட்டில் தயாரிக்கப்படும் முகக்கவசங்கள் காற்றில் எச்சில் மூலம் பரவும் வைரஸ்களை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக பேசும்போது, இருமும்போது, தும்மும்போது வெளிப்படுகிற நீர்த்திவலைகளை தடுப்பதில் வீட்டில் தயாரிக்கப்படும் முகக்கவசங்கள் பெஸ்ட்.
சிங்கிள் லேயரில் தயாரிக்கப்படும் முக்கவசங்கள் கூட இந்த நீர்த்திவலைகளை தடுக்கும் என தெரியவந்துள்ளது. 2 அல்லது 3 லேயர் கொண்ட துணி மாஸ்க்குகள், பனியன் துணியில் செய்யப்படும் மாஸ்க்குகள் நீர்த்திவலைகளை தடுப்பது தெரியவந்துள்ளது.
newstm.in