முதல்வர் ரேஸில் ஓபிஎஸ் பின்வாங்கியது இதனால் தான்! வெளுத்து வாங்கிய தங்கதமிழ் செல்வன்!
முதல்வர் ரேஸில் ஓபிஎஸ் பின்வாங்கியது இதனால் தான்! வெளுத்து வாங்கிய தங்கதமிழ் செல்வன்!

தமிழகத்தில், மே மாதம் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்பதை நேற்று, தொண்டர்கள் சூழ, துணை முதல்வர் ஓபிஎஸ் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இதனால் பல நாட்களாக சர்ச்சையில் இருந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் இது குறித்து செய்தித் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி ஒபிஎஸ் முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது காரணத்தோடு தான். நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெறும் நிலையில் இருப்பதைக் கண்ட பிறகு தான் முதல்வர் வேட்பாளர் நானில்லை, எடப்பாடி தான் எனக் குறிப்பிட்டுள்ளார்
மேலும் ஓபிஎஸ்,ஈபிஎஸ் இருவருமே ஒருவருக்கொருவர் காலை வாரி விடுவதில் சளைத்தவர்கல்ல என்றும் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.