1. Home
  2. தமிழ்நாடு

இதனால் தான் செந்தில் பாலாஜி ராஜினாமா கடிதத்தைப் பெற மறுக்கிறார் ஸ்டாலின் : அமித்ஷா பேச்சு..!

1

ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின்  என் மண் என் மக்கள் துவக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது,உலகத்தின் மிகப்பழமையான மொழியான தமிழ் மொழியில் உங்களிடம் பேச முடியாததை எண்ணி வருத்தப்படுகிறேன். ராமேஸ்வர பூமியானது இந்து மதத்தின் பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. என் மண் என் மக்கள் நடைபயணம் அரசியல் நடைபயணம் அல்ல. பழமையான தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நடைபயணமாகும்.

தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்கான நடைபயணமாகும். தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதிகளிலும் நரேந்திர மோடியின் சாதனைகளை அண்ணாமலை கொண்டு செல்ல போகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஏழைகள் நலத்திட்டங்களை மீண்டும் கொண்டு வர இந்த நடைபயணத்தை அண்ணாமலை மேற்கொள்கிறார்.தமிழ் மொழியின் சிறப்பை உலகம் முழுவதும் மோடி கொண்டு சென்றுள்ளார். மகாகவி பாரதியார் பிறந்தநாளான டிசம்பர் 11-ஆம் தேதியை இந்திய தேசிய மொழிகள் தினமாக அறிவித்துள்ளார். காசி, சவுராஷ்ட்ரா தமிழ் சங்கமங்களின் மூலம் தமிழின் பெருமையை இந்தியாவின் வடக்கிலும் மேற்கிலும் பரப்பினார்.

யு.பி.ஏ அரசாங்கம் பத்து ஆண்டுகால ஆட்சியில் 12 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது. காங்கிரஸ், திமுக கட்சிகள் வாக்கு சேகரிக்கும் போது, 2ஜி ஊழல் தான் மக்களுக்கு நினைவுக்கு வரும். காஷ்மீர் சிறப்பு பிரிவு 370-சட்டத்திருத்தத்தை நீக்குவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.யு.பி.ஏ அரசாங்கம் இலங்கையில் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட காரணமாக இருந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் தமிழக மீனவர்கள் நிறைய கஷ்டங்களை அனுபவித்தனர். எதிர்க்கட்சிகள் நாட்டை வளர்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர்களது குடும்பத்தை வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

சோனியா காந்திக்கு ராகுலை பிரதமராக்க வேண்டும் என்று ஆசை. ஸ்டாலினுக்கு உதயநிதியையும் லாலு பிரசாத் யாதவிற்கு தேஜஸ்வியையும் மம்தாவுக்கு அவரது மருமகனையும் உத்தவ் தாக்ரேவுக்கு அவரது மகனையும் முதல்வராக்க ஆசை.நரேந்திர மோடி மட்டுமே இந்தியாவிற்கு நலத்திட்டங்களை வழங்கும் ஆட்சியை நடத்தி வருகிறார். திமுக அரசு உலகிலேயே ஊழல் மிகுந்த அரசாக உள்ளது.

“தமிழ்நாட்டில் இப்போது நடக்கிற அரசாங்கம் ஊழல் நிறைந்த அரசாங்கமாக இருக்கிறது. உலகிலேயே ஊழல் நிறைந்த அரசாங்கமாக இருக்கிறது.

உங்களுடைய அமைச்சரவையில் ஒரு அமைச்சர் ஊழல் வழக்கில் சிக்கி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் சிறையில் இருக்கிறார். ஆனால் அவரை அமைச்சராகத் தொடர வைத்திருக்கிறீர்கள். இது வெட்கக்கேடானது” என்று முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு பேசினார்.

சிறையில் இருப்பவர் அமைச்சராக இருக்கலாமா, அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டுமா இல்லையா என்று கேள்வி எழுப்பிய அமித் ஷா, “ஸ்டாலின் அவரது (செந்தில் பாலாஜி) ராஜினாமா கடிதத்தை வாங்கமாட்டார். அப்படி வாங்கிவிட்டார் என்றால் அவர் எல்லா ரகசியத்தையும் சொல்லிவிடுவார். இதனால் தான் ராஜினாமா கடிதத்தைப் பெற ஸ்டாலின் மறுக்கிறார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு ட்வீட் போட்டால் உங்கள் ஆட்சியில் பூகம்பம் ஏற்படுகிறது. அவர்கள் பல கோடி ரூபாயில் செய்த ஊழல் இப்போது அம்பலமாகியிருக்கிறது.இந்த ஒரு ட்வீட்டுக்கே திமுக ஆட்சிக்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது என்றால், அண்ணாமலை 10 ஆயிரம் கிமீ நடக்கப் போகிறார். அப்படி என்றால் உங்கள் நிலை என்னாவகும் என்று நினைத்துப் பாருங்கள்.

இந்த அரசு மின்பகிர்மான கழகத்தில் ஊழல் செய்திருக்கிறது. ஏழை மக்களுக்கு விரோதமாகச் செயல்படும் அரசு. திமுக தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆனது?, திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, ஊழல் செய்து வருகிறது” என்று திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார் அமித்ஷா.

Trending News

Latest News

You May Like