1. Home
  2. தமிழ்நாடு

இதற்காக தான் டிடிவி.தினகரனுக்கு தேனியை விட்டுக் கொடுத்தேன் - ஓபிஎஸ் பேட்டி..!

1

தேனியில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார் ஓபிஎஸ். கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்களை களம் இறக்கினால் மிகப்பெரும் பொருளாதார செலவு ஏற்படும். மேலும் பல்வேறு சோதனைகளையும் தொண்டர்கள் சந்திக்க வேண்டி வரும். எனவே தொண்டர்களை சோதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்பதற்காகத்தான் இந்த மாபெரும் பொறுப்பை நானே ஏற்று நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன்.

கடந்த 1999ல் பெரியகுளம் மக்களவை தொகுதியில் டிடிவி.தினகரன் வெற்றி பெற்று எம்.பியானார். அவர் நலத்திட்டங்கள் மூலம் தாராள மனப்பான்மையை கற்றுக் கொடுத்தவர். அடுத்த தேர்தலில் தோல்வியை தழுவினாலும் அவரது எண்ணம், செயல், இதயம் தேனியை சுற்றியே இருந்தது என்பதை நான் நன்றாகவே அறிவேன். அதன்படி தேனி தொகுதியில் அவர் போட்டியிட நாங்கள் ஆதரவு தெரிவித்தோம். தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் போட்டியிடும் அவரை வெற்றிபெறச் செய்ய பாடுபட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் தேனி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பினர். டிடிவி.தினகரனும் தேனியை விரும்பியதால், நமது நன்றிக்கடனாக தேனி தொகுதியை அவருக்கு தந்திருக்கிறோம். நான் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை ரகசியமாக வைத்திருந்தேன். நீதி கேட்க ராமநாதபுரம் தான் சரியான தொகுதி என்று முடிவு செய்தேன். சரியான விடையை அவர்களால் தான் தர முடியும்.

அதிமுக உண்மை தொண்டர்களின் உரிமையை காக்கும் இந்த போராட்டம் வெற்றியடைந்து அது ஒரு சக்தியாக வெளிப்படும். தொகுதியாக ராமநாதபுரம் இருக்கும். நான் ராமநாதபுரம் சென்றாலும் என் இதயம் இங்கு தான் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Trending News

Latest News

You May Like