1. Home
  2. தமிழ்நாடு

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் முடி நரைத்ததற்கு காரணம் இதுதான்..!

1

விண்வெளியில் 9 மாதங்களை கழித்த சுனிதா வில்லியம்ஸ் 45 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், அதிக எடை இழந்து, முகம் நீண்டு, முடிகள் நரைத்து காணப்பட்டார். இந்நிலையில் அவர் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 288 நாள் சர்வதேச விண்வெளி ஆய்வுப் பயணத்திலிருந்து வெள்ளை முடி மற்றும் எலும்பு உதிர்வு உள்ளிட்ட கடுமையான உடல் மாற்றங்களுடன் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. சுனிதா வில்லியம்ஸ் தனது கருமையான, பெரிய கூந்தலுக்கு பெயர் பெற்றவர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் "காட்டு முடி கொண்ட பெண்" என்று கூட அழைக்கப்பட்டார்.

ஆனால் 9 மாத பயணத்திற்கு பிறகு கடந்த வாரம் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸின் தலைமுடி கிட்டத்தட்ட வெண்மையாகிவிட்டது. சுனிதா வில்லியம்ஸ் உடலில் ஏற்பட்ட இந்த மாற்றம் மனித உடலில் நீடித்த நுண் ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு மற்றும் அழுத்த மாற்றங்கள் ஆகியவற்றின் பாதிப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், தற்போது நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் 45 நாள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த 45 நாட்கள் மறுவாழ்வு திட்டம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) அவர்கள் நீண்ட காலம் தங்கியிருந்ததால் ஏற்படும் எலும்பு இழப்பு, தசைச் சிதைவு, நரம்பியல் பாதிப்புகள் மற்றும் பிற உடல்நல அபாயங்களை சரி செய்ய உதவுவதாக கூறப்படுகிறது.
 

விண்வெளி வீரர்கள் ஒவ்வொரு மாதமும் 1% வரை எலும்பு எடையை மைக்ரோ கிராவிட்டியால் இழக்கிறார்கள் என்று நாசாவால் மதிப்பிடுகிறது. அதன்படி 88 நாட்களில், வில்லியம்ஸ் கிட்டத்தட்ட 10% இழந்திருக்கலாம் எனவும் முதன்மையாக கால்கள், இடுப்பு மற்றும் முதுகெலும்பு போன்ற எடை தாங்கும் எலும்புகளில் எலும்பு முறிவுக்கான ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

பூமியில் ஒரு வருடத்தில் வயதானவர்கள் இழக்கும் அளவுக்கு இளம் விண்வெளி வீரர்கள் ஒரு மாதத்தில் அதிக எலும்புகளை இழக்கிறார்கள் என மருத்துவ உலகம் தெரிவிக்கிறது. விண்வெளியில் தங்கியிருக்கும் போது வீரர்கள் தசை இழப்பையும் எதிர்கொள்கின்றனர். அதன்படி விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததால் விண்வெளி வீரர்கள் தசை சிதைவை எதிர்கொள்வதாகவு மருத்துவர்கள், சுனிதா வில்லியம்ஸின் எடை இழப்புக்கும் இதுவே காரணம் என்றும் கூறுகின்றனர்.

விண்வெளி பயணம் நுண் ஈர்ப்பு விசை திரவங்களை சமமாக மறுபகிர்வு செய்து, இதயத்தின் உந்தி வலிமையை பலவீனப்படுத்துகிறது என்றும் காலப்போக்கில், இது இதய தசை சிதைவை ஏற்படுத்தக்கூடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விண்வெளி வீரர்கள் கண் பார்வை மற்றும் காது கேளாது உள்ளிட்ட பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர்.

நீண்ட பயணங்களில் ஈடுபடும் விண்வெளி வீரர்கள் தினசரி ஒரு பாக்கெட் சிகரெட் புகைப்பதைப் போன்ற டிஎன்ஏ சேதத்தை எதிர்கொள்வதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அயனியாக்கும் கதிர்வீச்சு டிஎன்ஏ இழைகளை துண்டாக்கி, செல் இறப்பு மற்றும் வயதாவதை துரிதப்படுத்துகிறது என்றம் இதானல் தோல் செல்கள் கூட வேகமாக முதிர்ச்சி அடைகின்றன என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அயனியாக்கும் கதிர்வீச்சுதான் சுனிதா வில்லியம்ஸின் முடி வெண்மையாக காரணம் என்றும் கூறப்படுகிறது. வளர்சிதை மாற்ற ஏற்றத்தாழ்வுகளும் முடி விரைவாக நரைக்க காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. விண்வெளி வீரர்கள் தங்களின் விண்வெளி பயணத்தின் போது முடியை தண்ணீர் இல்லாமல் டவல்களால் வாஷ் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like