"இதைத்தான் நானும், சுஷாந்தும் கடைசியாக பேசிக் கொண்டோம்" : சுஷாந்த் தந்தை!

"இதைத்தான் நானும், சுஷாந்தும் கடைசியாக பேசிக் கொண்டோம்" : சுஷாந்த் தந்தை!

இதைத்தான் நானும், சுஷாந்தும் கடைசியாக பேசிக் கொண்டோம் : சுஷாந்த் தந்தை!
X

சுஷாந்தின் இறப்பு குறித்து பேசியுள்ள அவரது தந்தை சிறு வயது முதலே சுஷாந்த் எதையும் வெளிப்படையாக பேசி பகிர்ந்துகொள்வார் என்றும் ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் அப்படி இல்லை என தெரிவித்துள்ளார். சுஷாந்தின் முன்னாள் காதலி அங்கிதாவை தெரியும். அவர் மும்பையில் மட்டுமல்ல, பாட்னாவில் கூட எங்களை எல்லாம் சந்தித்துள்ளார். அவர் சின்னத்திரையில் பணியாற்றியபோது பழக்கமானவர். எனக்கு தெரிந்து சுஷாந்த் வாழக்கையில் வந்த ஒரே பெண் அங்கிதா தான்'' என கூறியுள்ளார். நடிகை ரியா சக்ரபோர்த்தியை சுஷாந்த் காதலித்து வந்ததாக தகவல்கள் பரவிய நிலையில் அது குறித்து சுஷாந்தின் தந்தை எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும் ரியா சக்ரபோர்த்தி குறித்து எதுவும் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் பேசிய சுஷாந்தின் தந்தை, ''சுஷாந்திடம் கடைசியாக அவரது திருமணம் குறித்தே பேசினேன். உனக்கு பிடித்த ஒரு பெண்ணையே திருமணம் செய்துகொள் என்றேன். அதற்கு, 'இந்த கொரோனா நேரத்தில் திருமணமெல்லாம் வேண்டாம். நடித்த படங்கள் எல்லாம் வெளியாகட்டும். அடுத்த வருடம் பிப்ரவரி-மார்ச் மாத தருவாயில் திருமணம் செய்துகொள்ள திட்டம் வைத்துள்ளேன்' என சுஷாந்த் கூறினான். இதுவே எங்களுக்குள்ளான கடைசி உரையாடல்' எனத் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it