இது தான் நடந்தது..! பால் கேன்களுக்கு வரி 18%லிருந்து 12% ஆக குறைக்கப்பட்டது - எஸ்.ஜி. சூர்யா விளக்கம்..!
2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 53வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிர்மலா சீதாராமன், அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே சீரான 12% ஜிஎஸ்டி விதிக்கப்படும். எஃகு, அலுமினியம், இரும்பு, உள்ளிட்ட அனைத்து வகையான பால் கேன்களுக்கு ஒரே ஜிஎஸ்டி விதிக்க கவுன்சில் பரிந்துரைத்துள்ளது, இது தொடர்பாக ஆலோசித்து தீர்மானிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா,அலுமினியம் பால் கேன்களுக்கு இந்நாட்டில் 2017-ஆம் ஆண்டு வரை VAT வரி 26.86%. 2017 GST அமலுக்கு வந்த பின் இந்த வரி 18% என குறைக்கப்பட்டது. தற்போது, அது மேலும் 6% குறைக்கப்பட்டு 12% வரி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் நமக்கு நல்லது தான் செய்துள்ளார். சிலர் இதை திரித்து பேசுகின்றனர். மக்கள் இதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். காரணம் தவறாக பரப்பபடுகிறது.
மேலும் அவர் பால் கேன்களுக்கு 6% வரி குறைக்கப்பட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
அலுமினியம் பால் கேன்களுக்கு இந்நாட்டில் 2017-ஆம் ஆண்டு வரை VAT வரி 26.86%.
— Dr.SG Suryah (@SuryahSG) June 23, 2024
2017 GST அமலுக்கு வந்த பின் இந்த வரி 18% என குறைக்கப்பட்டது.
தற்போது, அது மேலும் 6% குறைக்கப்பட்டு 12% வரி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய நிதி அமைச்சர் திருமிகு.@nsitharaman அவர்களுக்கு நன்றி! pic.twitter.com/Hu5cFMqcJ4