1. Home
  2. தமிழ்நாடு

ஒரு டியூசன் ஆசிரியர் செய்யுற வேலையா இது..! 3 ஆண்டுகளாக மாணவியை மிரட்டி...

1

கேரளாவை சேர்ந்தவர் சரத் (வயது 28). இவர் அந்தப் பகுதியில் 3 டியூசன் மையங்கள் நடத்தி வருகிறார். அதில் ஒரு மையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்-1 மாணவி ஒருவர் கணித பாடத்திற்கு டியூசனுக்கு சேர்ந்தார்.
 

அப்போது அந்த மாணவியை, அவருக்குத் தெரியாமல் டியூசன் சென்டர் உரிமையாளரான ஆசிரியர் சரத் நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதனைக் காண்பித்து மிரட்டி மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அத்துடன் அந்த மாணவியின் சமூக வலைத்தள பக்கத்தைக் கையாணடு வந்துள்ளார்.

அந்த மாணவி தற்போது பி.டெக். படிக்கும் நிலையில், சரத்தின் டியூசன் சென்டரில் தொடர்ந்து படிக்கிறார். தன்னிடம் உள்ள நிர்வாண படங்களைக் காண்பித்து மிரட்டியபடி கடந்த 3 ஆண்டுகளாக மாணவியை ஆசிரியர் சரத் பாலியல் பலாத்காரம் செய்தபடி இருந்திருக்கிறார்.

டியூசன் ஆசிரியர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவந்த தகவலை, அந்த மாணவி தனது தோழி ஒருவரிடம் தெரிவித்தார். தோழியின் அறிவுறுத்தலின் பேரில் டியூசன் ஆசிரியர் சரத் மீது பாதிக்கப்பட்ட மாணவி, ஆளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பிறகே டியூசன் ஆசிரியரால் மாணவி பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து டியூசன் ஆசிரியர் சரத்தை போலீசார் கைது செய்தனர்.

மாணவியின் ஆபாச படங்கள் உள்ளதா? என்று ஆசிரியரின் செல்போன் உள்ளிட்டவைகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஆசிரியர் சரத் இது போன்று வேறு மாணவிகளைப் பாலியல் பலாத்காரம் செய்தாரா? என்று போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like