1. Home
  2. தமிழ்நாடு

ஒரு ஆசிரியர் செய்யுற வேலையா இது..! 6 வயது சிறுமியைப் பாலியல் சித்ரவதை செய்து கொன்ற கொடூரம்..!

1

குஜராத்தில் பிபலியா ஆரம்பப்பள்ளியில் 1ம் வகுப்பு மாணவியைத் துன்புறுத்திக் கொலை செய்த பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ராஜ்தீப் சிங் ஜாலா கூறுகையில், ”6 வயது பள்ளி மாணவியின் உடல் கடந்த வியாழன் அன்று, மாலையில் பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வழக்குப் பதிவு செய்த போலீசார், 10 பேர் கொண்டு குழு அமைத்துக் கொலைக்கான ஆதாரத்தைத் திரட்டினர்,” என்றார்.

மாணவியின் தாய் கூறுகையில், ”எனது மகளை, தலைமை ஆசிரியர் கோவிந்த நத், தினமும் காரில் அழைத்துச் செல்வார். அன்று காலையில் 10.20 மணிக்கு அவர், எனது மகளை வீட்டிலிருந்து அழைந்து செல்ல வந்தார். நான் அவளைக் காருக்கு அழைத்துச் சென்று ஏற்றிவிட்டேன் . ஆனால், எனது மகள் பள்ளிக்குச் சென்றடையவில்லை. இதைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிபடுத்தி உள்ளனர்.

”பள்ளிக்கு அழைத்துச் சென்ற தலைமையாசிரியர், வழியில் எனது மகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அதனால் அந்தச் சிறுமி, எதிர்ப்பு தெரிவித்து அடித்துள்ளாள். அதில் அதிர்ந்த போன அந்தத் தலைமையாசிரியர் அடிப்பதை நிறுத்த முயற்சித்துள்ளார்.

”மாலை 5 மணிக்குப் பள்ளிக்கு வரும்போது, காரிலேயே அந்தச் சிறுமியைக் கொலை செய்துவிட்டு உடலைப் பள்ளி கட்டிடத்தின் பின்புறம் உள்ள தோட்டத்தில் புதைத்து விட்டார். அவளுடைய புத்தக பை மற்றும் ஷூக்கள் வகுப்பறைக்கு வெளியே கிடந்தது. முதலில் மறுத்த அவர், நாங்கள் துருவி, துருவிக் கேள்வி கேட்டபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்,” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

கல்வித்துறை அமைச்சர் குபேர் தின்டோர் கூறியதாவது: இது மாதிரிச் சம்பவங்கள் சமூகத்தில் தொடர்ந்து நடைபெறுகிறது. இச்சம்பவம் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

விரைவில் விசாரணை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தோம். 3 நாட்களில் குற்றவாளியைக் கண்டுபிடித்து, தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்மாதிரியான சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, இனிமேல் இது போன்ற குற்றச்சம்பவங்கள், திரும்பவும் நடைபெறக் கூடாது. அதற்கான தேவையான நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Trending News

Latest News

You May Like