1. Home
  2. தமிழ்நாடு

ஒரு டாக்டர் செய்யுற வேலையா இது..! அரசு மருத்துவமனை டாக்டர் கைது..!

1

திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் டாக்டர் பாலசந்தர், 45. இவர், சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார் புகாரில் முகாந்திரம் இருப்பதை உறுதி செய்து டாக்டரை கைது செய்தனர்.
 

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சொந்த ஊராக கொண்டவர் இந்த டாக்டர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பணி நேரம் உட்பட எந்த நேரமும் இவர் குடிபோதையில் இருப்பார் என்று மருத்துவமனை ஊழியர்களும், பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.இந்த புகார் காரணமாக அவர் வெவ்வேறு இடங்களுக்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டதும் நடந்துள்ளது.

Trending News

Latest News

You May Like