1. Home
  2. தமிழ்நாடு

இது தான் தவறான செயல்..! சல்மான் கானின் எண்ட்ரியை கொண்டாட தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த ரசிகர்கள்..!

1

கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஏக் தா டைகர்'. இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் 'டைகர் ஜிந்தா ஹே' திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதன் மூன்றாம் பாகமாக தற்போது 'டைகர் 3' உருவாகியுள்ளது. மணீஷ் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியானது.பட ரிலீஸை சல்மான் கான் ரசிகர்கள் திரையரங்குகளில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.இந்தப் படத்தில் ஷாருக்கான் கௌரவ வேடத்தில் தோன்றி டைகர் 3 படத்தை ஒரு மல்டி ஸ்டார் படமாக மாற்றியுள்ளார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரில் உள்ள ஒரு தியேட்டரில் டைகர்-3 திரையிடப்பட்டது.

இந்த தியேட்டரில் படம் பார்க்க வந்த ரசிகர்கள் படத்தில் அறிமுகக்காட்சியின் போது தியேட்டருக்குள்ளேயே பட்டாசு மற்றும் வானவேடிக்கைகளை நிகழ்த்தி தியேட்டரில் படம்பார்க்க வந்த அனைவரையும் அல்லோலகல்லோலப் படுத்தினர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
 

Trending News

Latest News

You May Like