1. Home
  2. தமிழ்நாடு

அரசுப் பணிகளுக்கு இதன் மூலம்தான் தேர்வு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு..!

அரசுப் பணிகளுக்கு இதன் மூலம்தான் தேர்வு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு..!


தமிழகத்தில், அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தி தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 2, 2A உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து அவர்களுக்கு போட்டித்தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை. அதனால், தற்போது 2022-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

அனைத்து போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தகுதி தாளில் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்மொழி பகுதிகளில் 40% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே மற்ற தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஆனால் தற்போது, ஓமைக்ரான் தொற்று காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் போட்டித் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தற்போது அரசு பணிகளுக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் கூறுகையில், அனைத்து வகையான மாநில அரசு பணிகளுக்கும் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யும் வகையில் மசோதா அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி ஆவின், மின் வாரியம், போக்குவரத்து துறை உள்ளிட்ட அமைப்புக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like