உண்மை இது தான்..! வெள்ளியங்கிரி மலையேற அரசு ரூ.5,099 கட்டணம் விதித்ததா..?
இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு வனத்துறை சார்பில் மலையேற்றத் திட்டத்தை துணை முதல்வர் நிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வனத்துறை மற்றும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் சார்பில் தமிழ்நாடு மலையேற்றத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. யற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்புக்கு வலுசேர்க்கும் இந்த டிரக்கிங் திட்டம் செயல்படுத்தப்படும் எனறு அரசு சார்பபில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மலையேற்றத் திட்டம், திட்டத்திற்கு www.trektamilnadu.com என்றஇணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியும். தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தில் இயற்கை ஆர்வலர்களை மகிழ்விக்கும் விதமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களில் 40 தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற பாதைகளை வனத்துறை திறக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி முன்பதிவு செய்யும் மலையேறுவதில் ஆர்வம் கொண்ட இயற்கை ஆர்வலர்களுககு மலையேற்ற வழிகாட்டிகளாக காடுகள் குறித்த பாரம்பரிய அறிவை கொண்ட பழங்குடியின மக்கள் சுற்றிக்காட்டுவார்கள்.
இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில், பக்தர்கள் செல்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாக கருதபடும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல , திமுக அரசு கட்டணம் விதித்துள்ளது என்றும் தகவல் பரவி வந்தது.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பலர் கருத்து பதிவிட்ட நிலையில், செல்வக்குமார் என்கிற பயணர் ஒருவர் தெரிவித்ததாவது “ வெள்ளியங்கிரி மலை ஏற அரசு ₹5353.95 கட்டணம் விதித்துள்ளது. தெற்கில் உதித்த கைலாயமாக, இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாக வெள்ளியங்கிரி கருதப்படுகிறது. இந்த மலைக்கு, ஆண்டுதோறும் விரதமிருந்து பல லட்சம் மக்கள் பக்தி சிரத்தையுடன் யாத்திரையாக, எந்த கட்டணமும் இல்லாமல் செல்வது வழக்கம்.
கடும் மழை, யானை நடமாட்டம் காரணமாக தை மாதம் முதல் வைகாசி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி. ஆபத்தான மலை பாதையை மேம்படுத்த இதுவரை எந்த ஒரு முயற்சியும் எடுக்காத அரசு, கட்டணம் விதித்து வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த பதிவை தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவானது, இது பொய்யான தகவல் என்றும் விளக்கமும் அளித்துள்ளது.
அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது “ தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகளில் மலையேற்றம் செய்ய வனத்துறை சார்பில் "டிரெக் தமிழ்நாடு” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் மலையேற்றம் செய்ய ரூ.5,099 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், காப்பீடு, வழிகாட்டி வசதி, இருவேளை உணவு, இருவேளை ஸ்னாக்ஸ்,13 கி மீ வாகனப் பயணம், துணி பேக், தொப்பி, பேனா, பறவைகள் பேம்பிளட் போன்றவை அடங்கும்.
இது முழுக்க முழுக்க டிரெக்கிங் சேவை மட்டுமே. ஆன்மீகப் பயணம் இல்லை. கோயிலுக்கு முன்பே இந்த பயணம் முடிந்துவிடும். பக்தர்கள் மலையேற்றம் செல்லும் மாதங்களில் இந்த டிரெக்கிங் சேவை வழங்கப்படாது. மலையேற்றம் செய்யும் பக்தர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.
வெள்ளியங்கிரியில் பக்தர்கள் மலையேற அரசு ரூ.5,099 கட்டணம் விதித்ததாக வதந்தி@CMOTamilnadu @TNDIPRNEWS (1/2) https://t.co/t8oovmjKr5 pic.twitter.com/A8RZK86q9k
— TN Fact Check (@tn_factcheck) October 26, 2024