1. Home
  2. தமிழ்நாடு

விவசாயிகளுக்கு அடுத்த 2000 ரூபாய் வரும் நேரம் இதுதான்.. தேதி குறிச்சாச்சு..!

1

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் (பிஎம் கிசான்) திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 18 தவணைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், அடுத்த தவணைக்காக காத்திருக்கின்றனர். இந்த திட்டத்தின் அடுத்த தவணையை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவார்.

பிப்ரவரி 24ஆம் தேதி விவசாயிகளுக்கு பிரதமர் மோடி இந்த பரிசை வழங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நேரத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் கணக்கில் 2,000 ரூபாயைப் பெறுவார்கள். இது விவசாயம் மற்றும் பிற தேவைகளுக்கு உதவும். எனினும் இதற்கான அதிகாரர்ப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டின் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தப் பணம் மூன்று சம தவணைகளில் நேரடியாக விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் நோக்கம் விவசாயிகளுக்கு அவர்களின் நிதிச் சவால்களில் இருந்து நிவாரணம் அளிப்பதும், விவசாயத்தை மேம்படுத்துவதும் ஆகும்.

விவசாயிகள் தங்கள் தவணைத் தொகை நிலையைச் சரிபார்க்க pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம். அதில் 'Beneficiary Status' என்ற பகுதிக்குச் சென்று ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிட வேண்டும். நிலையைச் சரிபார்த்தவுடனேயே அடுத்த தவணை எப்போது வரும் என்பது தெரியும். விவசாயியின் ஆதார் எண் அல்லது வங்கி விவரங்கள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என்றால், அடுத்த தவணை சரியான நேரத்தில் பெறுவதற்கு இந்த செயல்முறையை விரைவில் முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் கிடைக்காது.

பிஎம் கிசான் திட்டத்தின் 19வது தவணை எதிர்பார்க்கப்படும் தேதி பிப்ரவரி 24. பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் இருந்து இந்த தவணையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படிகிறது. முன்னதாக 18ஆவது தவணை 2024ஆம் ஆண்டின் அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் பலன், அரசு நிர்ணயித்த தகுதி வரம்புகளை பூர்த்தி செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே கிடைக்கும். கணவன், மனைவி மற்றும் மைனர் குழந்தைகளைக் கொண்ட நிலம் வைத்திருக்கும் விவசாயி குடும்பம் இதில் பயன்பெறலாம். 2 ஹெக்டேருக்கு குறைவான நிலம் கொண்ட சாகுபடி நிலத்தின் உரிமையாளர்கள் பயன்பெற முடியும்.

Trending News

Latest News

You May Like