இவ்ளோ வரி கட்டியும் மழை வந்தா எங்க நிலைமை இப்படி தான் இருக்கு - புலம்பும் மக்கள்..!
சென்னையில் இன்று கனமழை பெய்து வரும் நிலையில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கும் அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன மழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை வேளச்சேரி பகுதி மக்கள் நேற்று மாலை முதலே தங்களின் கார்களை அங்குள்ள மேம்பாலத்தில் பார்க் செய்துள்ளனர்.
வேளச்சேரி மேம்பாலம் மட்டுமில்லாமல் தியாகராய நகர் ஜி.என். செட்டி மேம்பாலத்தில் முன்னெச்சரிக்கையாக தங்களது வாகனங்களை பார்க் செய்ய தொடங்கிய உள்ளனர் மக்கள்!
இந்நிலையில் பல லட்சம் லோனில் அபார்ட்மெண்ட் வாங்கி, சொத்துவரி ஸ்டாம்ப் வரி, தண்ணீர் வரி என பல வரிகளை கட்டி பல லட்சம் செலவு செய்து கார் வாங்கி, அதற்கு சாலை வரி, ஜிஎஸ்டி என செலுத்தியும் மழை பெய்தால் காரை மேம்பாலத்தில் பார்க் செய்யும் நிலைமையில்தான் திராவிட அரசு மக்களை வைத்துள்ளது என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.