1. Home
  2. தமிழ்நாடு

இது தான் பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம் - வெளியான அதிர்ச்சி தகவல்..!

1

அரியலூர் மாவட்டம், விரகாலூரில் உள்ள வெற்றியூரில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தீபாவளி விற்பனைக்காக ஆலையில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசு ரகங்கள் வெடித்து சிதறியுள்ளன.

இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. இந்த வெடி விபத்தில், அங்கு வேலை செய்து வந்த 11 பேர் உயிரிழந்தனர். சிலர் படுகாயமடைந்தனர். ஆலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10- க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இந்நிலையில் இந்த பட்டாசு ஆலை விபத்திற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

மூன்று பெண்கள் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் வெற்றியூர் பட்டாசு ஆலைக்கு பணிக்கு சென்றனர். அங்கு அனைவரும் பட்டாசுத் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மூன்று பேரும் முதல் நாள் வேலைக்கு சென்றதால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்ததாகத் தெரிகிறது.

அப்போது, அங்கிருந்த மூலப்பொருட்கள் அடங்கிய பெட்டியைப் பிடித்து இழுத்த போது, உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக, விபத்தில் இருந்து தப்பித்தவர்கள் கூறுகின்றனர். மேலும், உரிய பாதுகாப்பு இன்றி, குப்பைப் போல் வெடி மருந்துகள் குவிக்க வைக்கப்பட்டிருந்ததும், இந்த கோர விபத்திற்கு காரணமாக, அமைந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

அனுமதிகள் பெற்று ஆலைகள் இயங்கினாலும், பட்டாசு ஆலைகளின் செயல்பாடுகளை அதிகாரிகள் அவ்வப்போது, ஆய்வுச் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கின்றன. பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் பணிகளில் புதிதாக வருபவர்களை கண்காணிப்பதுடன், பயிற்சி அளிப்பதும் அவசியம் என்பதை வெற்றியூர் பட்டாசு ஆலை விபத்து உணர்த்துக்கிறது. 

Trending News

Latest News

You May Like