1. Home
  2. தமிழ்நாடு

ஆடி மாதம் புதுமணத் தம்பதியரை பிரித்து வைப்பதன் காரணம் இது தான்..!!

ஆடி மாதம் புதுமணத் தம்பதியரை பிரித்து வைப்பதன் காரணம் இது தான்..!!

ஆடி பிறப்பதற்கு முன்னரே ஆடி வரிசை வைத்து, புதுமணப் பெண்ணை அழைத்துசெல்வார்கள். காலங் காலமாக கடைப்பிடிக்கும் இத்தகைய பழக்கவழக்கங்களுக்குப் பின்னால் பல காரணங்கள் உண்டு,

பொதுவாக ஆடி மாதங்கள் முழுவதும் மனிதர்கள் எந்தவிதமான கொண்டாட்டங்களுக்கும் இடம் கொடாமல் இறைவனை கொண்டாடி மகிழவேண்டும் என்பதே முக்கியம். அதனால் தான் புதுமனை புகுவிழா, திருமணவிழா போன்ற சுப காரியங்கள் விலக்கப்பட்டன.

தட்சணாய காலம் என்றழைக்கப்படும் ஆறு மாதங்களில், முதலில் வரும் ஆடி யும், இறுதியில் வரும் மார்கழியும் பீடை மாதம் என்று கூறுகிறார்கள். இது பீடு மாதம் என்றழைக்க வேண்டும். மனதில் இறைவனையும் இறை வழிபாட் டையும் இறைசக்தியையும் புகுத்தும் காலம் என்பதே உண்மையான பொருள்.

ஆடி மாதத்தில் இறைவனுக்கே முக்கியத்துவம் என்று வழிபாடுகளை முன்னிலைப்படுத்தி திருமணமான தம்பதியரைப் பிரிந்திருக்க சொல்வார்கள். ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தைப் பிறக்கும். சித்திரையில் கத்தரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

அதனால் குழந்தைக்கும், தாய்க்கும் உடலில் எளிதில் நோய் தொற்று உண்டாக வாய்ப்புண்டு என்பதாலேயே தம் பதியரைப் பிரிந்திருக்க சொன்னார்கள். திருமணம் முடிந்த முதல் வருடத்தில் வரும் ஆடி மாதத்தில் பிரித்து குழந்தைப்பேறை தள்ளிப்போடும் போது அடுத்த குழந்தை ஆடியில் கருத்தரித்தால் என்ன செய்வது.

ஏனெனில் முதல் குழந்தைக்கு கொடுக்கும் முக்கியத்து வத்தை இரண்டாவது குழந்தைக்கு கொடுப்பதில்லையே என்று கேட்கலாம். இதற்கும் நம் முன்னோர்கள் பெரும் விளக்கம் வைத்திருக்கிறார்கள். அம்பிகை ஆடி மாதத்தில் தவம் இருந்து இறைவனோடு இணைந்தாள் என்கிறது புராணம். திருமணம் முடிந்த காலத்தில் ஆணும், பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து செயல்படுவதும், ஒன்றுபட்டு வாழ்வதும் சற்று பொருந்தாமல் இருப்பது இயல்பு.

ஆரம்பத்தில் உண்டாகும் கருத்துவேறுபாட்டை களைவதற்கும், ஒரு வரையொருவர் புரிந்துகொண்டு அவர்களையே சிறந்த துணையாக நினைத்து அவர்களைத் தேடி செல்ல வேண்டும் என்று புராண கதைகள் வலியுறுத்துகிறது.

புராணக்கதைகளில் பார்வதி தேவி தவமிருந்து இறைவனோடு இணைந்த கால மாக ஆடிமாதத்தையே சொல்கிறார்கள். இறைவனேஅம்பிகையை நாடி சென்று இணைந்த ஆடி மாதத்தில் தம்பதியரை பிரித்துவைத்தால், காலமெல்லாம் இணைபிரியாமல் வாழும் கலையைக் கற்றுகொள்வார்கள்.

இந்த மாதம் தான் அம்பிகை இறைவனை நினைத்து ஊசி முனையில் தவமிருந்ததாகவும் கூறு கிறார்கள். அந்நாள் தான் ஆடித்தபசு என்று சிவாலயங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மேலும் திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பெண்ணை பிறந்தவீட்டினர் ஆடி மாதம் அழைத்துவந்து விரதங்கள், பூஜை முறைகளைக் கற்றுத்தர வேண்டும்.

பதினம் வயதைக் கடந்து இளம்பருவமடைந்த பெண்களை விட இல்லத் தரசிகளான பின்பு, இத்தகைய சாஸ்திரங்களைக் கற்றறிந்து கொள்ளும் ஆர்வமும் அதைக் கடைப்பிடிக்கும் குணமும் இயல்பாகவே அதிகரிக்கும் என்பதால் தான், திருமணம் முடிந்த பிறகு முறையான சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்றுத்தருகிறார்கள்.

கணவன் பலமே தன்னுடைய பலம் என்று மனைவியும், மனைவியின் துணையின்றி தன்னுடைய பலம் மேன்மையடையாது என்று கணவனும் உணர்ந்து, இந்த ஆடி மாதம் பிரிந்திருந்தால் வாழ்வு முழுமையுன், அன்பும் அந்நியோன்யமுமாய் இணைந்து ஒருமித்துவாழலாம்.
ஆடிமாத புதுதம்பதியினர் பிரிவு நிரந்த இணைவுக்கான தற்காலிக பிரிவு என்றே புராணக்கதைகள் கூறுகிறது.

Trending News

Latest News

You May Like