லியோ படத்திற்கு அரசு நெருக்கடி கொடுப்பதற்கான காரணம் இது தான் : சீமான் விமர்சனம்..!
நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு தமிழக அரசு நெருக்கடி கொடுக்கிறது. ஜெயிலர் படத்துக்கு இதுமாதிரி இடையூறு செய்யப்பட்டதா? அதே நேரு விளையாட்டரங்கில்தான் ஜெயிலர் பாடல்கள் வெளியிடப்பட்டன. இதற்கு முன்னர் விஜய்யின் படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்திருக்கிறதா இல்லையா? இதுவரை இல்லாத நெருக்கடியை லியோ படத்துக்கு ஏன் தமிழக அரசு தருகிறது?
நடிகர் விஜய் படத்துக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடு. ஏனென்றால், தம்பி விஜய் அரசியலுக்கு வரப்போகிறார். அதைத் தெரிந்து கொண்ட அரசு இந்த நெருக்கடியை கொடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.