கதறி அழுத மு.க.அழகிரி… இதுதான் காரணம்!

திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் தாயார் ராஜாமணி அம்மையாரின் உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியனின் தயார் ராஜாமணி நேற்று காலமானார். அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு கிராமத்தில் வைக்கப்பட்ட அவருடைய உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அப்போது ராஜாமணி அம்மையாரின் உடலை பார்த்து மு.க.அழகிரி கதறி அழுதார். அவரது மனைவி காந்தியும் கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினார்.
கதறி அழுது கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி மு.க.அழகிரி பின்னர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
newstm.in