1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் பருவம் தவறி மழை பெய்ததற்கு இது தான் காரணம் - மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி..!

1

கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை சென்னையை புரட்டிப் போட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை இரவு முதல் நேற்று இரவு வரை பெய்த கனமழையால் சென்னை நகரின் பல்வேறு சாலைகளில் நேற்று தண்ணீர் தேங்கியது.

பல இடங்களில், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்ததுடன், ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தன. இவை அனைத்தையும் மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அகற்றி வருகின்றனர். சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர், அமைச்சர்கள், துணை முதல்வர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சென்னையைத் தவிர கோவை, மதுரை, சிவகங்கை, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், மதுரை ஆதீனம் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இன்று தமிழகத்தில் பருவம் தவறி மழை பெய்ததற்கு இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் உள்ள பக்தி குறைவுதான் காரணம். கோவில் ஸ்தலங்களை வைத்திருப்பவர்கள் முறையான பட்டா வழங்குவதில்லை. அதனால்தான் பருவமழை பெய்கிறது" என்றார்.

Trending News

Latest News

You May Like