1. Home
  2. தமிழ்நாடு

ரயில் விபத்துக்கான காரணம் இதுதான்..! உதவி எண்கள் அறிவிப்பு.!

1

டார்ஜிலிங்கில் சரக்கு ரயிலுக்கு சிகப்பு சிக்னல் காட்டப்பட்டுள்ளது. ஆனால் லோகோ பைலட் அதை கண்டு கொள்ளாமல் சென்றுள்ளார். அதே வழித்தடத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்த நிலையில், இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்துள்ளன. சுதாரிப்பதற்குள் இரண்டு ரயில்களும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.இந்த நிலையில், தற்போது விபத்தின் பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

 விபத்து குறித்து அறிந்து கொள்ள உதவி எண்கள் ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 033-2350-8794 , 033-238-33326 இந்த எண்களை தொடர்பு கொண்டு ரயிலில் உங்களுக்கு தெரிந்தவர்கள் பயணித்திருந்தார்களா என்பதை அறிந்து கொள்ளவும்.

விபத்து குறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து தன்னை மிகுந்த சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். நிலைமை குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்த இடத்திற்கு செல்ல இருக்கிறார்” என பதிவிட்டுள்ளார்.

 ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்


இந்த நிலையில் விபத்து தொடர்பாக ரயில்வே அமைச்சர் பேசியதாவது, இந்த விபத்து துருத்திஷ்ட வசமானது எனவும் மேற்கு வங்க ரயில் விபத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள் நடைபெறும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். ரயில்வே, தேசிய பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன. விபத்து நடந்த பகுதிக்கு ரயில்வே உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like