இது தான் கோவை மெட்ரோ ரயில் திட்டம் தாமதத்திற்கான காரணம் - வானதி சீனிவாசன் தகவல்..!
இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், இந்த தாமதத்திற்கு ஏற்படும் காரணம் பற்றி கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தி மத்திய அரசிடம் மாநில அரசு ஒப்படைக்கும் போது கூட அந்த நிலத்தில் வசிப்பவர்கள் முழுமையாக காலி செய்யப்படவில்லை. இன்னும் அந்த நிலத்தில் ஒரு சில நில உரிமையாளர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். இதனால் மத்திய அரசு உடனடியாக பணிகளை ஆரம்பிப்பதில் சுணக்கம் இருக்கின்றது என்ற தகவல் வந்திருக்கின்றது, என அவர் கூறினார்.
எனவே நிலத்தை ஒப்படைக்கும் அந்த நிலம் முழுவதும் யாரும் இல்லாமல் காலியாக ஒப்படைப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் கோவை வரும்போது கேட்டுக்கொள்ள உள்ளதாக அவர் கூறினார். நிலத்தில் ஆட்கள் இருக்கும் போது மத்திய அரசாங்கம் அவர்களை வெளியேற்ற முடியாது எனவே முழுமையாக காலி செய்யப்பட்ட நிலத்தை வழங்க வேண்டும் என அவர் கூறினார்.
வானதி தொடர்ந்து பேசுகையில், மெட்ரோ ரயில் திட்டம் தாமதமாவது ஏன் எனவும் கருத்து தெரிவித்தார். கோவையின் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு நிறைய தகவல்களை தமிழக அரசு வழங்க வேண்டியது உள்ளது என வானதி கூறினார்.
மாநில அரசு இன்னும் நிறைய தகவல்களை (ஒருங்கிணைந்த இயக்கத் திட்ட அறிக்கை - Comprehensive Mobility Plan மற்றும் மாற்று ஆய்வுத் திட்ட அறிக்கை - Alternative Analysis Report எனும் 2 முக்கிய அறிக்கை) மத்திய அரசுக்கு கொடுக்காமல் இருப்பதால் மெட்ரோ திட்டம் காலதாமதம் ஆவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே கோவையில் மெட்ரோ ரயில் திட்டதிற்கான முழுமையான தகவல்களை மாநில அரசு மத்திய அரசுக்கு விரைந்து அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் இங்கு வரும் போது அவரிடம் கேட்க உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.