விபத்திற்கு இது தான் காரணம் : ரயில் தண்டவாளத்தில் நட்டு போல்ட், நட்டுகள் வலுக்கட்டாயமாக அகற்றம்..!
கடந்த ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி மைசூரில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி இந்த பயங்கரமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 20 பயணிகள் படுகாயமடைந்த நிலையில், ரயில்வே துறை விபத்து குறித்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த விபத்து குறித்து அறிக்கை வெளியாகி உள்ளது. அது குறித்து தெற்கு மண்டல ரயில்வேயின் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி விசாரணைத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அவர், "இந்த விபத்து திடீர் அல்லது தானியங்கி தோல்வியால் எதுவும் ஏற்படவில்லை.
தண்டவாளத்தில் உள்ள நட்டுகள் மற்றும் போல்ட்டுகளை யாரோ வேண்டுமென்றே கழற்றி இருக்கிறார்கள். இந்த நாசவேலை தான் விபத்திற்கு காரணம். அதனால், இந்த விபத்து 'நாசவேலை'க்கு கீழ் வகையறப்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், அந்த ரயிலின் ஓட்டுநர் ஜி.சுப்ரமணியின் விழிப்புணர்வு மற்றும் சமயோசிதத்தையும் பாராட்டியுள்ளார்.