1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் மணிவண்ணன் மரணத்திற்கு இது தான் காரணம்..! 10 ஆண்டுக்கு பின்பு தங்கை உடைத்த ரகசியம்..!

1

நடிகர் மணிவண்ணன் இயக்குனர் என்பதையும் தாண்டி நடிகராகவும் கலக்கி மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமானார். இவர் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும் 50 திரைப்படங்களை இயக்கியும் இருந்தார்.அதுமட்டுமல்லாமல் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் மனதில் பட்டதை எல்லாம் அப்படியே சினிமாவில் வசனங்களாக மாற்றி விடுவது இவருடைய தனித்திறமை.

நிழல்கள், டிக் டிக் ,அலைகள் ஓய்வதில்லை போன்ற ஏராளமான திரைப்படங்களுக்கு பாரதிராஜாவின் உதவியாளராக மணிவண்ணன் இருந்திருக்கிறார். அதைத்தொடர்ந்து இயக்குனராக மாறிய மணிவண்ணன் கிட்டத்தட்ட 50 திரைப்படங்களில் இயக்கியிருக்கிறார். அதில் 34 திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.

ஒரு கட்டத்தில் படம் இயக்குவதை கைவிட்டுவிட்டு முழுவதுமாக நடிப்பில் கவனம் செலுத்தினார்.பின்னர் 2013ம் ஆண்டு உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவரின் மரணத்திற்கு அவரது குடிப்பழக்கம் காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் மணிவண்ணனின சகோதரி முதல் முறையாக பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.அண்ணன் இறந்து பத்து வருஷம் ஆகிவிட்டது. இத்தனை நாட்களை நான் எப்படி கடந்து வந்தேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. அண்ணன் இருந்த வரைக்கும் நான் எந்த ஒரு விஷயத்தை கேட்டாலும் எனக்கு உடனே வாங்கி தந்து விடுவார், நான் எது கேட்டாலும் முடியாது என்று சொன்னதே கிடையாது.

அண்ணன் இறப்பு குறித்து சில வதந்திகள் பரவி வருகிறது. அதில் மணிவண்ணன் அளவுக்கு அதிகமாக குடித்ததால் இறந்துவிட்டார் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அதுவெல்லாம் உண்மையே கிடையாது. அண்ணன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே குடியை முழுமையாக விட்டு விட்டார்.அதற்குப் பிறகு அண்ணிக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது.

அண்ணிக்கு புற்றுநோய் இருந்து இருக்கிறது. அதுவும் கடைசி கட்டத்தில் இருக்கிறார் என்ற உண்மையை எங்கள் யாரிடமும் சொல்லாமல் டாக்டர் அண்ணனிடம் மட்டும் கூறியிருக்கிறார். அதை தெரிந்த பிறகு தான் அண்ணன் மனது ரொம்பவே உடைந்து போயிருந்தார். அவருக்குள் ஆயிரம் கவலைகளை மனதிற்குள்ளே வைத்து வந்தது தான் அவருடைய மரணத்திற்கு காரணம்.

அண்ணன் இறந்த சில நாட்களிலே அண்ணியும் இறந்து போய்விட்டார் என்று மணிவண்ணனின் இறப்பு குறித்து அவருடைய தங்கை விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Trending News

Latest News

You May Like