1. Home
  2. தமிழ்நாடு

ஆந்திரா ரயில் விபத்திற்கு இது தான் காரணம் - வெளியான திடுக்கிடும் தகவல்..!

1

ஆந்திர விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா-கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து நின்றது.

அப்போது அதே தடத்தில், விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு மற்றொரு பயணிகள் ரெயில் சென்றது. அது, நின்றுகொண்டிருந்த விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரெயிலின் பின்புறத்தில் பலமாக மோதியது.

அதில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் 13 பயணிகள் பலியாகினர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்தநிலையில்,ரெயில் விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதில், ரெயில்வே அதிகாரிகளின் தவறால் இந்த சோக சம்பவம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், ரெயில்வே அதிகாரிகளின் தவறால் இந்த சோக சம்பவம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிக்னலை லோகோ பைலட் கவனிக்காததே இந்த விபத்துக்கு காரணம் என்று ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like