1. Home
  2. தமிழ்நாடு

பிரண்ட்ஸ் பட நடிகர் இறப்பிற்கு இது தான் காரணம் - வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை..!

1

1994ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை ஒளிப்பரான தொடர் ப்ரெண்ட்ஸ். 10 சீசன்களையும் விடாமல் பார்த்தவர்கள் உண்டு.அந்த தொடரில் சாண்ட்லர் பிங்(Chandler Bing)எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மேத்யூ பெர்ரி.

இவர் அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் வீட்டில் இருக்கும் பாத்டப்பில் மேத்யூ பெர்ரி உயிரற்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையே மேத்யூ பெர்ரி இறப்பில் ஏதோ சதி இருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என சிலர் தெரிவித்ததாக வெளிநாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் 'பிரண்ட்ஸ்' சீரிஸ் நடிகர் மேத்யூ பெர்ரி, அளவுக்கு அதிகமாக கெட்டமைன் (வலி நிவாரணி) எடுத்துக் கொண்டதால் தான் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த அக்., மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் உள்ள குளியலறையில் இருந்து பெர்ரி சடலமாக மீட்கப்பட்டார். இதனால் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப் பதிந்த நிலையில், கெட்டமைன் தான் இறப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

Trending News

Latest News

You May Like