1. Home
  2. தமிழ்நாடு

குறுஞ்செய்தி ஆதாரத்தை காட்டிய ஓபிஎஸ் - நயினார் ரியாக்ஷன் இது தான்..!

Q

பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் காண்பித்தார். அதில் கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி மற்றும் ஏப்.12 ஆகிய தேதிகளில் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை காண்பித்தார்.
இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய குறுஞ்செய்தியை செய்தியாளர்களிடம் காண்பித்தது பற்றிய கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் "செல்போனில் காட்ட வேண்டாம்; ஆதாரமாக கொடுங்கள்" என பதில் அளித்தார். மேலும் நயினார் நாகேந்திரன் பேச தயாரானபோது பிறகு பேசலாம் எனக் கூறி அண்ணாமலை அழைத்துச் சென்றார். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் - நயினார் நாகேந்திரன் இடையே கருத்து மோதல் முற்றி வருகிறது. 

Trending News

Latest News

You May Like