1. Home
  2. தமிழ்நாடு

நோட்டாவுக்கு 2,18,674 வாக்குகள் கிடைத்த ஒரே தொகுதி இது தான்..!

1

மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் பா.ஜ.க. 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள  நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சங்கர் லால்வானி 12,26,751 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். 

இரண்டாவது இடத்தில் நோட்டா 2,18,674 வாக்குகளைப் பெற்றுள்ளது. சங்கர் லால்வானி நோட்டாவை விட  10,08,077 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.நோட்டாவுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சஞ்சய் 51,659 வாக்குகள் பெற்றார்.

இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்சய் காண்டி பாம் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அக்சய் காந்தி பாம் என்பவரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்தது. ஆனால் அவர் கடைசி நேரத்தில் திடீரென பாஜவில் சேர்ந்தார். இதனால் அந்த தொகுதியில் முக்கிய எதிர்க்கட்சி சார்பில் வேட்பாளர் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து இந்தூர் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும் காங்கிரஸ் கட்சி சார்பில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் பாஜ வேட்பாளர் லால்வானி 12,26,751 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு நோட்டாவுக்கு 2,18, 674 வாக்குகள் கிடைத்துள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சஞ்சய் சோலங்கி உட்பட 13 வேட்பாளர்கள் நோட்டாவுக்கு குறைவாகவே வாக்குகள் பெற்றுள்ளனர்.

.

Trending News

Latest News

You May Like