இது தான் விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த மூவ்..!

நடிகர் விஜய் விஜய் மக்கள் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறார். இந்த இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சிக்கு நிகராக தீவிரமாக இயங்கி வருகிறது. மாணவ - மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, அன்னதானம் , தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தல் , ஏழை எளிய மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த விஜய் பயிலகம் , இலவச சட்ட உதவி மையம் என பல்வேறு நலத்திட்டங்களை விஜய் மக்கள் இயக்கம் செயல்படுத்தி வருகிறது. அத்துடன் அவ்வப்போது மாவட்ட அளவிலான நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த சூழலில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணியை வலுப்படுத்துவதற்காக மாவட்ட மகளிர் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் 9ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த அடுத்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.