இந்த புத்தாண்டில் ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்தது இதுதான்..!!
2025ஐ உற்சாகத்துடன் வரவேற்க பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், இந்தியாவின் இரண்டு முன்னணி ஆன்லைன் விரைவு வர்த்தக சேவைகளால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களில், புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு ஒவ்வொருவரின் வீட்டில் விருந்துகள் மற்றும் கொண்டாட்டங்கள் அதிகமாக இருந்ததை காட்டுகிறது.
பானங்கள் விற்பனை 552% ஆகவும், ஒருமுறை தூக்கி எறியும் கோப்பைகள் மற்றும் தட்டுகள் 325% ஆகவும் அதிகரித்துள்ளன. இது ஹவுஸ் பார்ட்டிகளின் தேவைகளை எடுத்து காட்டுகிறது. அதேபோல், சோடா மற்றும் மாக்டெய்ல் விற்பனையும் 200% உயர்ந்துள்ளது. அதேபோல், இரவு 7.41 மணியளவில் 119 கிலோ எடையுடன் ஐஸ் ஆர்டர் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் பெறப்பட்டுள்ளது. டிசம்பர் 31 மதியம் வரை, ஆணுறை விற்பனை அதிகரித்தது. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஏற்கனவே 4,779 ஆணுறைகளை டெலிவரி செய்துள்ளது. அதேபோல், மாலை வேளையில் ஆணுறை விற்பனை மேலும் அதிகரித்துள்ளது.
பிளிங்கிட்டிலும் ஆணுறை விற்பனை அதிகரித்ததுள்ளது. புத்தாண்டு தினத்தன்று இரவு 9.50 மணியளவில் 1.2 லட்சம் ஆணுறைகள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆணுறைகள் எந்த வகையான ப்ளேவர்கள் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டது என்ற விவரத்தை பிளிங்கிட் பகிர்ந்துள்ளது. அதில், சாக்லேட் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆணுறை விற்பனையில் 39% சாக்லேட் சுவைக்காகவும், ஸ்ட்ராபெர்ரி 31% ஆகவும் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பப்பில்கம் மற்றொரு பிரபலமான ப்ளேவராக நிரூபிக்கப்பட்டது. இது விற்பனையில் 19% ஆக இருந்தது.
பிளிங்கிட்டில் இந்த முறை சிப்ஸ் மற்றும் குளிர் பானங்களின் விற்பனை எதிர்பார்த்தபடி உயர்ந்தது. ஆனால், ஆண்கள் உள்ளாடைகள் எதிர்பாராத வகையில் ஆர்டரை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல், ஒரு வாடிக்கையாளர் மட்டும் கைவிலங்குகளை ஆர்டர் செய்ததை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் வெளிப்படுத்தியுள்ளது.