இதுவே தங்கம் விற்பனையில் உச்ச விலை..! சவரன் ரூ.70 ஆயிரத்தை கடந்தது..!

நம் நாட்டில் சில தினங்களாக, தங்கம் விலை மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 10), தங்கம் கிராம், 8,560 ரூபாய்க்கும், சவரன், 68,480 ரூபாய்க்கும் விற்பனையாகின.
நேற்று (ஏப்ரல் 11) தங்கம் விலை கிராமுக்கு 185 ரூபாய் உயர்ந்து, 8,745 ரூபாயாக அதிகரித்தது. சவரனுக்கு 1,480 ரூபாய் அதிகரித்து, 69,960 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 12) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,770க்கு விற்பனை ஆகிறது. இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலை. ஒரு சவரன் தங்கம் விலை, எப்போதும் இல்லாத வகையில், 70,000 ரூபாயை கடந்து, நகை பிரியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.