1. Home
  2. தமிழ்நாடு

இதுதான் திராவிட மாடல்.. சீமான் விமர்சனம்..!

இதுதான் திராவிட மாடல்.. சீமான் விமர்சனம்..!


“முதல் நாள் ஒன்று சொல்லிவிட்டு அடுத்த நாள் வேறொன்று செய்வதே திராவிட மாடல்” என, சீமான் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பல்லக்கு தூக்கும் முறை செத்துவிட்டது.

நவீன அறிவியல் இதுபோன்றவற்றை ஒழித்துவிட்டது. இவ்வளவு அறிவியல் வளர்ச்சி வந்துவிட்ட பிறகு, இந்த நூற்றாண்டில் என்னை நீங்கள் தூக்கி சுமந்து செல்லுங்கள் என்று கூறுவதை திருவாடுதுறை ஆதீனமே வேண்டாம் என்று கூறியிருக்க வேண்டும்.

அதே பல்லக்கில் இருந்துகொண்டு, ஒரு மோட்டார் பொருத்தி இழுத்துக் கொண்டு செல்லுங்கள். மக்களுக்கு வாழ்த்து கூறுங்கள், மக்களும் உங்களை பார்க்கட்டும்.

நீங்கள் தூக்கி சுமந்து செல்லுங்கள், அது மரபு என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது..? இது காலங்காலமாக நடக்கிறது என்று கூறப்படுகிறது.

காலங்காலமாக இங்கு சாதி இருக்கிறது, சாதியக் கொடுமை இருக்கிறது, மதம் இருக்கிறது மதத்தின் பெயரில் நடக்கும் கொடுமைகள் இருக்கின்றன, வன்புணர்வு இருக்கிறது.

இதெல்லாம் காலங்காலமாக இருக்கிறது அனுமதியுங்கள் என்று கூறுவீர்களா..? ஒரு பண்பட்ட சமூகத்தில் பட்டினப் பிரவேசத்தை தற்போது இருக்கின்ற இளைய சமூகத்தினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்தது. அதில் உறுதித்தன்மை இல்லை. உடனே சரணடைந்து, பட்டினப்பிரவேசத்தை நடத்திக் கொள்ளலாம் என்று கூறிவிட்டனர். முதல் நாள் ஒன்று சொல்லிவிட்டு அடுத்த நாள் ஒன்று செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடல்” என்று சீமான் கூறினார்.

Trending News

Latest News

You May Like