1. Home
  2. தமிழ்நாடு

இதுதான் பாஜக மாடலுக்கும் திராவிட மாடலுக்கும் உள்ள வித்தியாசம் - முதல்வர் ஸ்டாலின்..!

Q

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ” மதுரை வந்த அமித்ஷா, 10 ஆண்டுகளுக்கு முன்பாக பாஜக அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை என்ன நிலைமையில் இருக்கிறது என்று பார்த்தாரா? அதே மதுரையில் திமுக அரசு கட்டிய கலைஞர் நூற்றாண்டு நூலகம், கீழடி அருங்காட்சியம் என ஏராளமான திட்டங்களை முடித்திருக்கிறோம். இதுதான் பாஜக மாடலுக்கும் திராவிட மாடலுக்கும் உள்ள வித்தியாசம்.
10 ஆண்டுகளாக கட்டுவதற்கு எய்ம்ஸ் என்ன மருத்துவமனையா? இல்லை விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? நிதி ஒதுக்கியிருந்தால் இரண்டே ஆண்டுகளில் கட்டி முடித்திருக்கலாமே? இந்த லட்சணத்தில் குறை சொல்லி நீங்கள் பேசலாமா?” என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், @madurai_aiims என்ற மதுரை எய்ம்ஸ் (Madurai AIIMS) மருத்துவமனையின் எக்ஸ் பக்கத்தில் ஒரு கிராபிக்ஸ் வீடியோ பகிரப்பட்டுள்ளது. மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி இருக்கும் என்பதாக இந்த கிராபிக்ஸ் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை கிண்டலடித்துள்ள முதல்வர் ஸ்டாலின்,மதுரைக்கு வந்த மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் AIIMS என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன்.
அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள். 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன! என தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like