1. Home
  2. தமிழ்நாடு

இது தான் வியாபார யுக்தியோ.. துணிக்கடை பொம்மையான நிஜப்பெண்..!

1

நம்மூர் ஜவுளிக்கடைகளில் விற்கப்படும் விதம்விதமான உடைகளை அணிந்தபடி துணிக்கடை பொம்மைகள் வரிசைகட்டி நிற்பதைப் பார்த்திருப்போம். துணிக்கடை பொம்மைகளுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் உடைகளைப் பார்த்து, அவற்றால் ஈர்க்கப்பட்டு வாடிக்கையாளர்களை கடைகளுக்குள் வர வைக்கும் உத்திதான் இது.

துணிக்கடைகள், நகைக்கடைகளில் பயன்படுத்தப்படும் இத்தகைய பொம்மைகளை ஆங்கிலத்தில் Mannequin என்று கூறுவதுண்டு. முழுமையான உருவம், தலை அல்லது மார்பு வரையிலான பொம்மைகள் என இதில் பலவகை உள்ளன. இத்தகைய பொம்மைகள், ரூ.2,000 முதல் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உடைகள், நகைகளை அணிந்து கடைகளுக்கு முன்பு போஸ் கொடுக்கின்றன.

இந்நிலையில், துணிக்கடைகளில் இருக்கும் பொம்மைகளுக்கு பதிலாக, பெண்களுக்கு ஆடை அணிவித்து அவர்களை Treadmill-ல் நடக்க வைத்த விநோதம் சீனாவில் அரங்கேறியுள்ளது!

பொம்மைகளை நிற்க வைப்பதைவிட, பெண்கள் ஆடை அணிந்து RAMP-ல் நடப்பது போல் நடக்கும்போது, அந்த உடை எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை காட்ட முடிவதாக நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. இந்த யோசனையை சிலர் வரவேற்றாலும், சோதனைக்குட்படுத்தும் விலங்குகளை போல மாடல்களை நடத்துவதாக பலர் விமர்சித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like