பெரிய மாற்றத்துக்கான தொடக்கம் இது.. முதலமைச்சர் உருக்கம் !!

சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட.. என முதலமைச்சர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலையில் விளையாடி மகிழ ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதைகள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளன. தற்காலிக பாதைகள் திறப்பு விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளிகளின் சக்கர நாற்காலிகள் எளிதில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தற்காலிக பாதை நேற்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் கடலில் குளித்து விளையாட சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. தற்போது தற்காலிகமாக தொடங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை விரைவில் நிரந்தரமாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மணல் பரப்பில் சென்று கடலில் விளையாடுவது என்பது மாற்றுத்திறனாளிகளுக்கு பெரும் சிரமம். ஆனால் கடல் நீரில் கால் நினைத்து விளையாடி மகிழும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதனிடையே, இது தொடர்பாக முதலமைச்சர் உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில், த்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம். சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட.. என முதலமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம்.
— M.K.Stalin (@mkstalin) December 28, 2021
சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட. pic.twitter.com/E1vT5FIqTp
newstm.in