தோனிகிட்ட உள்ள கெட்டப்பழக்கம் இதுதான் : ஹர்பஜன் காட்டம்!!

மகேந்திர சிங் தோனியை எல்லோரும் புகழும் போது யுவராஜ் சிங், சேவாக் ஆகியோர் கேள்வி கேட்பது வழக்கம். அந்த வகையில் தற்போது ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.
2007 உலகக்கோப்பை டி20 பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சேவாகைக் கண்டாலே மிரளும் அணியுடன் மோதும் போது அவரை உட்கார வைத்து யூசுப் பதானை ஓப்பனிங்கில் இறக்கினார் தோனி.
2008இல் முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவில் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட்டை நீக்கினார். அப்போது முத்தரப்பு தொடரை இந்தியா வென்றது, ஆனால் தோனியின் பங்களிப்பு பெரிதாக இல்லை.
இப்படி சில விமர்சனங்கள் தோனி மீது வைக்கப்படும் நிலையில், ஹர்பஜன் சிங் காட்டமாக தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அதாவது, 2011 உலகக்கோப்பையில் ஹர்பஜன் தன் இடத்தை இழந்தார்.
2013 சாம்பியன்ஸ் டிராபி, 2015 உலகக்கோப்பை என்று ஹர்பஜன் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அடுத்த 5 ஆண்டுகளுக்கு அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்தார்.
தன்னை அணியிலிருந்து நீக்கிய தோனியிடம் ஏன் என்று கேட்டுள்ளார் ஹர்பஜன். ஆனால் ஒரு பதிலும் அவரிடமிருந்து வரவில்லை. பதில் அளிக்க மாட்டேன் என்று ஒருவர் இருக்கும் போது என்னை இப்படி நடத்தியதற்கான காரணத்தை நான் அவரிடம் கேட்டு என்ன பயன் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
newstm.in