1. Home
  2. தமிழ்நாடு

இது தான் திமுக செய்த சாதனை- அண்ணாமலை..!

1

 பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்றைய தினம், பரமக்குடியில் என் மண் என் மக்கள் நடைபயணத்தில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கொண்டு வந்த நலத்திட்டங்களின் சாட்சியாக, பொதுமக்கள் அலைகடலென, பெரும் திரளாகக் கூடி, அவர் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தினர். பிரதமர் மோடியின் ஆட்சி, அனைவருக்குமான ஆட்சி. கடந்த ஒன்பது ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் நாட்டில் வறுமை குறைந்திருக்கிறது. தமிழ் மக்கள் பெருமளவில் பயனடைந்துள்ளனர்.


 



ஊழல் திமுக ஆட்சி, முதல்வர் ஸ்டாலினின் மகன் மற்றும் மருமகனுக்கான ஆட்சி. கடந்த ஒரே ஆண்டில், ஊழல் மூலம் முப்பதாயிரம் கோடி சம்பாதித்துள்ளார்கள். நம்பர் 1 மாநிலமாக மாற்றியுள்ளதாகக் கூறுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அது உண்மைதான். அதிகக் கடன் வாங்கியதில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது தமிழகம். நம் தமிழ் மக்கள் ஒவ்வொருவர் மீதும் 3,50,000 ரூபாய் கடன் சுமையை சுமத்தியுள்ளார். வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஊழல் கூட்டணியைத் தோற்கடித்து, மூன்றாவது முறையாக, பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like