1. Home
  2. தமிழ்நாடு

இது தான் பிரதமர் மோடி தரும் உத்தரவாதம் - பிரியங்கா காந்தி விமர்சனம்..!

1

பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

நமது நாட்டில் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். ஆனால், வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு பிரச்சாரத்தைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை.

கடந்த ஜூலை 2022-ல் மத்திய அரசு பாராளுமன்றத்தில் வெளியிட்ட தகவலில், கடந்த 8 ஆண்டுகளில் 22 கோடி இளைஞர்கள் வேலைக்காக விண்ணப்பித்ததாகவும், ஆனால் 7 லட்சம் இளைஞர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்ததாகவும் தெரிவித்திருந்தது. 

அதாவது சுமார் 21.93 கோடி தகுதியுள்ள இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பு என்று வாக்குறுதி அளித்த பா.ஜ.க. அரசால் ஏற்கனவே உள்ள வேலைகளை வழங்கவோ, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ முடியவில்லை. 

தேர்தலில் பிரதமர் உத்தரவாதம் அளிக்கிறார். உண்மையில், அவரது உத்தரவாதம் என்பது வேலையின்மைக்கான உத்தரவாதம் ஆகும். இவ்வாறு பிரியங்கா காந்தி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.   


 

Trending News

Latest News

You May Like