1. Home
  2. தமிழ்நாடு

இது எங்க கோட்டை! இங்கே யார் வந்தாலும் எந்த பருப்பும் வேகாது - செல்லூர் ராஜு..!

1

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழ்நாட்டின் சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் 90% நிறைவேற்றி விட்டதாக முதல்வர் கூறுகிறார்.  

தங்களின் கட்சிக் கொடியை கூட ஏற்ற முடியவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நொந்து நூலாகிப் பேசுகிறார். வேங்கை வயல் விவகாரத்தில் தீர்வு காணவில்லை. திமுக எம்எல்ஏ வீட்டில் பட்டியலின சிறுமி தாக்குதலுக்கு ஆளாகப்பட்டு இதுவரை அதற்கு தீர்வு காணவில்லை. எப்படி இருந்தேன் நான் இப்படி ஆயிட்டேன் தான் திருமாவின் நிலைமை. 

இந்த ஆட்சி அமைவதற்கு காரணமாக இருந்த அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கம்யூனிஸ்ட் கட்சியினர் போராடுகிறார்கள். இந்த அரசு தூக்கிப்பிடித்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இன்றைக்கு திமுக அரசை எதிர்க்கிறார்கள். தமிழக முதல்வர் கைகால் பிடித்து இந்த ஆட்சியை தக்க வைக்க நினைக்கிறார். எங்கள் கட்சியை நம்பி பொதுச்செயலாளர் எடப்பாடி தான் முதல்வர் என, அதிமுகவை ஆட்சி அமைக்க யார் வருகிறார்களோ அவர்களை இணைத்துக்கொண்டு தான் களத்திற்கு போகப் போகிறோம். நாங்கள் விஜய்யை கூட்டணிக்கு அழைத்தோமா? என்று அவர்கள் தான் கூறவேண்டும். 

இந்த விவகாரம் பற்றி அவர்களிடமே கேட்க வேண்டும். சீமான் பெண்களை வைத்துக் கொண்டே ஒரு பெண்ணை பற்றி இழிவாக பேசுகிறார். அவரது பேச்சு அனைவரின் முகத்தையும் சுளிக்கச் வைக்கிறது. பொது இடத்தில் பெண்களைப் பற்றி அவர் மரியாதையாக பேச வேண்டும். மதுரை மேற்கு தொகுதி அதிமுகவின் கோட்டை. இங்கே யார் வந்தாலும் எந்த பருப்பும் வேகாது. சாதாரண தொண்டரை நிறுத்தினால் கூட அதிமுக வெற்றி பெறும் என அமைச்சர் மூர்த்தியை மறைமுகமாக சாடினார். 

Trending News

Latest News

You May Like