1. Home
  2. தமிழ்நாடு

தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டிய துயரங்களுள் இதுவும் ஒன்று.. வைரமுத்து காட்டம் !

தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டிய துயரங்களுள் இதுவும் ஒன்று.. வைரமுத்து காட்டம் !


கடலூர் மாவட்டம் தெற்குதிட்டை ஊராட்சி மன்ற தலைவராக பட்டியலினத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் உள்ளார்.

ஊராட்சி மன்ற தலைவரான அப்பெண்ணை, ஊராட்சியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தரையில் அமரவைக்கப்பட்டார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

அரசியல் கட்சி தலைவர்கள் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகாரையடுத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும் மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர் நேரடியாக சென்ற விசாரணை நடத்தினர்.

இதன்காரணமாக தெற்குதிட்டை ஊராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர் சிந்துஜா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள துணைத்தலைவர் மோகன்ராஜ் தேடப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமரவைக்கப்பட்ட சம்பவத்திற்கு கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, பட்டியலினத்துத் தாயொருத்தி தரையில் வீசப்படுவதா? அவரென்ன மண்புழுவா? தலைவியாய்க் கூட அல்ல... மனுஷியாய் மதிக்க வேண்டாமா? என் வெட்கத்தில் துக்கம் குமிழியிடுகிறது. தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டிய துயரங்களுள் இதுவும் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.


newstm.in


Trending News

Latest News

You May Like