இனி பிறப்பு சான்றிதழில் இது கட்டாயம்..!
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா கடந்தாண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, பிறப்பு பதிவேட்டில் இனி குழந்தையின் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் தெரிவிப்பது கட்டாயம் என உள்துறை அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, குடும்பத்தின் மதம் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் இனி இருவரின் மதத்தையும் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாநில அரசுகள் இந்த விதிகளை முறையாக ஏற்றுக்கொண்டு, இந்த புதிய விதிமுறை குறித்த அறிவிப்பை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்பு வரை குடும்பத்தின் மதம் மட்டுமே பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு வந்தது.
தற்போது புதிய விதிகள் கொண்டுவரப்பட்டதால், பிறப்பு பதிவுக்கான படிவம் 1-ல் சில திருத்தங்கள் அமலுக்கு வந்துள்ளது. அந்த படிவத்தில் தாயின் மதம், தந்தையின் மதம் என்ன? என்று தனித்தனியே கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு எதிரில் தேர்வு செய்வதற்கான டிக் மார்க் போடும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில், தங்களது மதம் என்னவென்று டிக் செய்ய வேண்டும். மேலும், இந்த புதிய விதிமுறை குழந்தையைத் தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.