1. Home
  2. தமிழ்நாடு

இது சூப்பர்ல்ல..! வேலை போச்சா...கவலை வேண்டாம்; நாங்க தரோம் 6000 டாலர்..!

1

 சர்வதேச அளவில் தொழில் மந்த நிலை காரணமாக, சிங்கப்பூர் நாட்டில் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் ‘ஸ்கில்ஸ்பியூச்சர்’ ஆதரவுத் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் 6 மாதங்களுக்கு 6000 சிங்கப்பூர் டாலர் வரை (இந்திய மதிப்புப் படி, ரூ. 3 லட்சத்து 83 ஆயிரம்) நிதியுதவி வழங்கப்படும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது தங்கள் நிறுவனங்கள் நஷ்டம் அடையும்போது வேலை இழப்பவர்களுக்கு இந்தத் திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்த ஆண்டின், தேசிய தினப் பேரணியில் பிரதமர் லாரன்ஸ் வோங் பேசியதாவது: வேலையை இழந்தோருக்கு, ஸ்கில்ஸ்பியூச்சர் ஆதரவுத் திட்டத்தின் கீழ், ஆறு மாதங்கள்வரை நிதியுதவி வழங்க உள்ளோம். இந்தப் பணம், அவர்கள் வேலை தேடுவதற்கும், தொழில் பயிற்சி மேற்கொள்வதற்கும் உதவிகரமாக இருக்கும். நாங்கள் உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம்.

சில நாடுகளில் வேலையில்லாதோருக்கான காப்புறுதித் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. அதைவிடச் சிறப்பாகச் செய்யச் சிங்கப்பூர் அரசு விரும்புகிறது. ஸ்கில்ஸ்பியூச்சர் திட்டம்குறித்து விவரங்களை, விரைவில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வெளியிடுவார். இவ்வாறு அவர் பேசினார்.

Trending News

Latest News

You May Like