இது டிஜிட்டல் மயமாக்கல் அல்ல... ஏழைகளுக்கு கஷ்டத்தை கொடுக்கும் - முதல்வர் ஸ்டாலின்..!

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு அனைவரும் வங்கிக் கணக்குகளை திறக்க வலியுறுத்தியது. பின்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வந்தது. டிஜிட்டல் இந்தியாவை முன்னிலைப்படுத்தியது. அதைத் தொடர்ந்து என்ன நடந்தது?
டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம், ரிசர்வ் வங்கி மாத வரம்பிற்கு மேல் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கு ரூ. 23 வரை வசூலிக்க அனுமதித்துள்ளது. ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் வசூலிப்பது மக்கள் ஒரே நேரத்தில் தேவைக்கு அதிகமாக பணம் எடுக்கும் நிலை உருவாகும்.
ஏற்கனவே 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் தரப்படாமல் உள்ளது. ஏ.டி.எம்., கட்டண உயர்வால் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு மேலும் சுமை ஏற்படும். இது டிஜிட்டல் மயமாக்கல் அல்ல. ஏழைகளுக்கு கஷ்டத்தை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.