இது புதுசா இருக்கே..! அதிமுக கூட்டத்திற்கு வருவோருக்கு தங்க நாணயம் ..!

திருப்பூரில் அதிமுக கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்கு புதுவகையான முறையை கையாண்டுள்ளது . வருகின்ற 5-ம் தேதி ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஊத்துக்குளி பகுதியில் நடைபெறுகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், கே சி கருப்பன், தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
எனவே இந்த கூட்டத்திற்கு பொதுமக்களை அதிகளவில் வரவைக்கும் வகையில், அதிமுக புது வகையான ஒரு யுக்தியை கையாண்டுள்ளது. அதன் படி, பிறந்தநாள் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு குலுக்கல் முறையில் 3-நபர்களுக்கு தங்க நாணயம் வழங்க இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
மேலும் 300 நபர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் மிக்சி ,குக்கர், கிரைண்டர், பீரோ ,பேன், சில்வர் பாத்திரங்கள் குலுக்கல் முறையில் பரிசு பொருட்களாக வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் பொதுக்கூட்டத்தில் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது என அதிமுகவினர் சார்பில் தற்பொழுது ஊத்துக்குளி பகுதி முழுவதுமே துண்டு பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.