1. Home
  2. தமிழ்நாடு

இது புதுசா இருக்கே..! உலகத் தலைவர்கள் பெயர்களில் உணவு வகைகள்!

1

18வது ஜி20 உச்சி மாநாடு, தலைநகர் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 20 நாட்டுத் தலைவர்கள் ஒரே இடத்தில் கூடி உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியில் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன.

இன்றும் நாளையும் நடக்கவுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள உலகநாட்டுத் தலைவர்களை வரவேற்று, பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இந்த மாநாடு முடிந்த பின்பு, இன்று இரவு 7 மணிக்கு ஜி20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளிக்கிறார்.

இந்நிலையில், சைவ உணவு மெனு ஒன்றில், அமெரிக்க ஜனாதிபதி பெயரை குறிக்கும் வகையில், அதில் “பைடன் தந்தூரி மாலை ப்ரோக்கோலி” என்று பெயரிடப்பட்டது. அசைவ மெனுவில், “ட்ரம்ப் ஹாஃப் தந்தூர் சிக்கன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பைக் குறிக்கிறது.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 


 

Trending News

Latest News

You May Like