இது புதுசா இருக்கே..! தக்காளியைப் பாதுகாக்க ‘பவுன்சர்ஸ்’!
உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசியில் காய்கறி கடையை நடத்தி வரும் வியாபாரி அஜய் ஃபவுஜி, தக்காளியை வாங்க வரும் மக்கள், மோதலில் ஈடுபடுவதாலும், சிலர் தக்காளியைத் திருடிச் செல்வதாலும் பவுன்சர்களின் சேவையை நாடியுள்ளதாகக் கூறியுள்ளார். அதேபோல், தக்காளி ஒரு கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், மக்கள் 50 முதல் 100 கிராம் வரையில் மட்டுமே தக்காளியை வாங்கிச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், டெல்லி, ஹரியானா, அசாம், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஜம்மு- காஷ்மீர், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பூண்டு, இஞ்சி, எண்ணெய், பருப்பு வகைகள், அரிசி, காய்கறிகள் உள்ளிட்டப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.