இது வெறும் வதந்தியே..! கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை - ரத்தன் டாடா..!

நமது நாட்டின் மிக முக்கியமான தொழிலதிபர் ரத்தன் டாடா. அவருக்கு இப்போது வயது 86.. டாடா சன்ஸ் நிறுவனம் இப்போது இந்தளவுக்கு வளர்ந்து இருக்கிறது என்றால் அதில் ரத்தன் டாடா பங்கு முக்கியமானது.
இதற்கிடையே ரத்தன் டாடாவுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அங்கு ஐசியூ பிரிவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் உடல்நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது உடல்நிலை குறித்து சமீபத்தில் பரவி வரும் வதந்திகளை நான் அறிவேன், மேலும் இந்த செய்திகள் ஆதாரமற்றவை என்று அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். எனது வயது மற்றும் தொடர்புடைய மருத்துவ நிலைமைகள் காரணமாக நான் தற்போது மருத்துவ பரிசோதனை செய்து வருகிறேன். கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என பதிவிட்டுள்ளார்.